Thursday, April 19, 2018

ஒரு திகில் அனுபவம் i


                                       ஒரு திகில் அனுபவம்
                                      -----------------------------------

ஒரு திகில் அனுபவம்
இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில நாட்கள் ஓட்டலில் தங்கிவிட்டு  பொன்மலைப் பட்டியில் ஒரு நண்பன்  மூலம் வீடு பார்த்தான் பழைய வீடாயிருந்தது கதவுகளிலும் கதவு நிலைகளிலும்  மரம் உளுத்துப்போனது போல் இருந்தது பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது மாலை வேளைகளில் பாட்டு கேட்கும்  மனைவி மற்றும் பிறந்து நான்கே மாதங்களுமான குழந்தையுடனும்தனிக் குடித்தனம்தொடங்கி விட்டான்  வாழ்க்கை படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு இருந்தது ஒரு நாள் இரவு அழுது வடிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின்  பின்புறம் போவதைப் பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள் என்ன ஏது என்று தீர்க்கமாகச் சொல்லத் தெரியவில்லை வேகமாக நெளிந்து ஊர்ந்து சென்றது போல்இருந்தது என்றாள் என்னதான்  அது என்று வீடு முழுதும் தேடிப் பார்த்தும் எதுவும்  தென்படவில்லை சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்  அடியில் ஒரு ஓட்டை இருந்தது
அதன் உள்ளிருந்து அவ்வப்போது  ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாய்
இருந்தது பாம்பின்  நாக்கு என்று எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய் விட்டார்களென்ன ஏது என்று தெரியாமல் கைக் குழந்தையை வைத்துக் கொண்டு , வீட்டில் பாம்பும்  இருந்தால் …..இவன் கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான் அவ்வப்போது நாக்குதான்வெளியில்க் தெரிந்ததே தவிர அந்தப் பாம்பு வெளியே வரவில்லைஅந்தஒட்டையில் ஒரு நீளமான குச்சியை வைத்துக் குடைந்தான் நீளமான குச்சி உள்ளே போகும் அளவுக்கு ஓட்டையாக இருந்ததால்தால் தானோ என்னவோ  அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும்  ஊது பத்தியைக் கொளுத்தி ஓட்டைக் குள் புகை போகும் படிசெய்து பார்த்தும்   அது வெளியே வரவில்லை இரவு நேரம் போய்க் கொண்டிருந்ததுகுழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன் மனைவியும்  படுக்க ஏற்பாடு செய்யப்பட்டது படுப்பதற்கு முன்  அந்தக் கதவின்  நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டு பரப்பினார்கள் கண அயர்ந்து தூங்கிவிட்டால், அது தெரியாமல் வெளியில் வந்து விட்டால் தடம் பார்த்து தெரிந்து கொள்ளலாமே  அன்றுஇரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது அது வெளியில் போனதற்கானதடம்தெரியவில்லை விடியற்காலை ஒரு பக்கம் இவனும் மறு பக்கம் அவளும்  அதுவெளியே வரக் காத்திருந்தனர் அவள் கையில் ஒரு கழி இவன் கையில் ஒரு இரும்புச் சட்டுவம்   அது எப்படியும்வெளியே வரும் வந்தவிடன் ஒரே போடு  என்பதாகப் ப்ளான் கண்களில் எண்ணையை  விட்டுப் பார்ப்பது போல்  கவனமாகக் கண்காணித்துக்  கொண்டிருந்தார்கள். அது உள்ளே தான் இருந்ததுவெளியில்  போன அடையாளம் ஏதுமில்லை  திடீரென்று அது வெளியில் ஓடியதுஎன்ன ஏது என்று பார்க்காமல் அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு  வெளியே வந்த அது இரண்டாக  வெட்டுப்பட்டு இருந்தது இறந்த பார்த்தால் அது ஒருஅரணை !!!!         
        
Tuesday, April 17, 2018

என் எழுத்துகள் நினைத்துப் பார்க்க


                              என்  எழுத்துகள்  நினைத்துப் பார்க்க
                              ---------------------------------------------------------

1970 களின் முன்பகுதியில் எழுதிய கதை எனக்கு மனசாட்சி என்ற சொல்லே அலர்ஜி/ எந்த ஒரு காரியத்தையும் மனசாட்சிக்கு விரோதமாகச் செய்கிறார்களா என்ன. காரண காரியங்களைகற்பிதம் செய்து செய்த காரியத்தை நியாயப்படுத்த உப்யோகிக்கும் வார்த்தையே மனசாட்சி அதையே ஒருகதையின் கருவாக்கினேன்  நான் வலை ஆரம்பித்த போது வெளியிட்ட கதைகளில் ஒன்று  என்ன செய்ய அப்போதுஎனக்கு வாசகர்கள் இருக்கவில்லை பின் ஒரு முறை மீள்பதிவாக்கினேன் எப்போதுஎன்று தேடவேண்டும்    அதையே நான் திருச்சியில் இருந்தபோது நாடகமாக்கி மனமகிழ் மன்றத்தில் அரங்கேற்றினேன் .கதையின்  கரு சற்றே புரட்சிகரமானது ஆனால் அதுவும் மனசாட்சிகு  விரோதமில்லாமல் இருக்க முயன்றது
நாடகமாக்க விரும்பியபோது அதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர்  சில நாடக உத்திகளைக் கையாண்டேன் வலைப்பதிவிலும் முயற்சி செய்து இருக்கிறேன்  பல genre ல் எழுதி இருக்கிறேன்   அதில் இதுவும்  ஒன்று  பதிவு மிகச் சிறியதாகி இருப்பதால் மகிழ்ச்சி வேண்டாம்சுட்டிகளைப் படித்தால்  நீளமாக இருக்கும் ஆனால் சுட்டிகளைப் படித்தால்தான்முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் நாடகமாகப் பதிவில் எழுதி இருந்தாலும் சில பல உத்திகளையும்  காணலாம்  சுட்டிகளுக்க்ப் போனால்தான் தெரியும் பதிவுக்காக  சில காணொளிகளை  இண்டெக்ரேட்  செய்து வித்தியாசமாக்கினேன்   

மனசாட்சி ( கதை ) 
நாடகம் சாம்பிளுக்கு  1 
சாம்பிள் 2 

Saturday, April 14, 2018

இன்னொரு சிறுகதை                         இன்னொரு சிறு கதை
                        ------------------------------------
 ஒரு சிறு கதை எழுதினால் பின்னூட்டங்களில் இதுமாதிதானிருக்கு மென்று நினைத்தேன்  என்னும் ரீதியில்  எழுதுகிறார்கள் இதன்  முடிவையும்  யூகித்து இருந்தால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 


”’வென்னீர் போட்டாச்சா.? எப்பக் குளிச்சு எப்ப நான் ரெடியாகிறது|.
”‘மொதல்ல நீங்க டவல் தேடி எடுத்து, பாத்ரூம் போங்க. எனக்கு ரெண்டு கைதானே இருக்கு. எழுந்ததிலிருந்து ஒரே ஓட்டம்தான். குழந்தைகளுக்கு டிபன் ரெடி செய்யணும். ஸ்கூல் பஸ் வரதுக்குள்ள அவங்களும் ரெடியாக வேண்டாமா. எங்கிட்ட உங்க அவசரத்தைக் காட்டுங்க, ஏதோ கவர்னர் உத்தியோகத்துக்குப் போற மாதிரி”
. ....
‘என்ன, விட்டா பேசிட்டே போறே. கெய்சர் கெட்டுப்போனதால உங்கிட்ட வென்னீருக்கு நிக்க வேண்டி இருக்கு. சரி, சரி, டிபன் ரெடி பண்ணு. ‘

காலையில் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குள்போதும் போதும் என்றாகி விடும் மங்களத்துக்கு. இப்போது கணவனும் காலையில் தொந்தரவு தருகிறார். அவருக்கும் செய்ய வேண்டும். ஒரு வழியாக தேவைகளைப் பூர்த்தி செய்து, ,அப்பாடா’ என்று பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள்.

அவள் கணவன் முன் வந்து, ”‘இதப் பார்.இந்த டை சரியா இருக்கா....இந்தப் பேண்டுக்கு இந்த ஷர்ட் மேட்ச் ஆகிறதா”’ என்று கேட்டுக்கொண்டு நின்றான்.

”எல்லாம் சரியாத்தான் இருக்கு. உங்களுக்கு யாரும் பொண்ணு கொடுக்க வேண்டாம்”. ‘
”‘என் கன்சல்டிங் அறையை சுத்தம் செய்து வைத்தாயா.?நாலு பேர் வந்து போற இடம்”.
”‘எல்லாம் சுத்தம் செய்தாச்சு.உங்கள் மேசை மேல் இன்றைய பேப்பர் வைத்திருக்கிறேன். நீங்க சொல்ற நாலு பேர் வந்து போகிற நேரம் போக மீதி நேரம் வரி விடாமல் படியுங்கள். கூடவே ஒரு பொருளும் வைத்திருக்கிறேன், உங்கள் உபயோகத்துக்கு”.

இவ்வளவு களேபரத்துக்கும் பிற்கு டாக்டர் சுந்தரேசன், வீட்டின் முன் இருக்கும் தன் கன்சல்டிங் அறையில் உட்கார்ந்தான். மேசையின் மேல் இருந்த புதிய பொருளைப் பார்த்ததும் தன் மனைவியின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே இருந்தது ஒரு ஈ ஓட்டும் FLY SWATTER.!.
  


Wednesday, April 11, 2018

ஒரு சிறுகதை


                                        ஒரு சிறு கதை
                                          ----------------------


பல genre களில் சிறுகதை எழுதி இருக்கிறேன்  படித்து ரசிக்கலாம்  கீதா மதிவாணனின்  மொழி பெயர்ப்பிலும் இம்மாதிரி ஒரு கதை இருந்தது. ஆனால் இச்சிறுகதைஅதற்கு முன்பே பதிவானது
 இங்கு ஒரு நிகழ்வே கதையாய்

அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர் விடுதி என்று ஏதும்  தனியாக இல்லாததால்  ஆபீசில் ஒரு அறையையே  விருந்தினர் விடுதியாகப் பயன்படுத்த்னர்  பணி நடக்கும் இடத்துக்குப்போக வரவும் போக்குவரவு வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதாலவரைஅங்கே தங்க வைத்தனர் 

வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு திரைப்படமும்  பார்த்துஇரவு பதினோரு மணி யளவில் அறை வந்தவர் சற்று நேரத்தில்  உறங்கி விட்டார்  அவருக்கு திடீரென ஜல் ஜலங் என்று சப்தம் கேட்டு கண்முழிப்பு வந்தது  உடல் எல்லாம்  வியர்க்க  ஆரம்பித்தது  நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும்   முடியாமல் பயத்தால் போய் விட்டது
சிறிதுநேரத்தில்  எல்லாம்  பிரமையாய்  இருக்கும் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க  எத்தனித்தார் சற்று நேரத்தில் மறு படியும்  ஜல் ஜலங்  என்ற சப்தம் கேட்டது. அவருக்கு பயத்தில் நெஞ்சே  வாய்க்குள் வந்துவிட்டதுபோல் இருந்ததுஇருட்டில்பயம் அதிகரிக்கவே  கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டார் ஃபானின்  வேகத்தைக் கூட்டினார் மனம் ஒருநிலைப்பட மறுத்தது  என்ன என்னவோஎண்ணங்கள்  கந்தர் சஷ்டி கவசம்சப்தமாகச் சொல்லப் பார்த்தார் வாயசைந்ததே தவிர வார்த்தைகள்வெளி வர வில்லை ஒர் பேயோ பிசாசோ வாழும் இடத்தில் தங்க வைத்து விட்டார்களே  என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்கோபமாய்  வந்தது  ஆஃபீசுக்கு ஒரு வாட்ச்மேன் கூட கிடையாது இந்தநேரத்தில் யாரிடம் போவதுஎங்கே செல்வது என்றெல்லாம்  எண்ணிக்கொண்டு எல்லோரையும் ஒரு வழியாய்த் திட்டித் தீர்த்தார் காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது முதலில் இந்த இடத்தைவிட்டு  எங்காவது செல்ல வேண்டும் என்று தன்னுடைய பெட்டியைத் தன் உடைமைகளால்நிரப்பி வெளியே கிளம்பினார்
        
வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப்பெண் மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்தில் இருந்து  எழுந்து வந்தாள் அவள் நடக்கும் போது அவள் கை அசைவிலும்  கால் அசைவிலும்  ஜல் ஜலங்  என்று சப்தம் கேட்டது  
-------------------------------------------------------------------------
Sunday, April 8, 2018

மா வும் தென்னையும்                                     மா வும்  தென்னையும்
                                     --------------------------------------

தென்னையும் மா மரமும்
என் வீட்டில் ஒரு மாமரம் இருப்பது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்  அது காய்க்கத் தொடங்கி விட்டது என்பதை நினைவு படுத்துதல்  போல் பிள்ளைகளின்  கல் வீச்சு தொடங்கி விட்டது நான் இப்போதெல்லாம் கண்டு கொள்வதில்லை இந்த வயதில் தானே அவர்களால்  அதில்மகிழ்ச்சி அடைய முடியும்  ஆனால் என்  கவலை எல்லாம் அவர்கள் எறியும்  கல் யாருடைய மண்டையையும்  பதம் பார்க்கக் கூடாது என்பதுதான் காய்கள் கனிந்துபழுக்கும் போது மிகச் சிலவே  எங்களுக்குக் கிடைக்கும்  எனக்கும் என் மனைவிக்கும்   அதைப் பறிப்பதே கடினமான வேலை எனக்கு இந்த அறுவைச் சிகிச்சை முடிந்தபின்  டாக்டர் படிகளில்  ஏறுவதைத் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார்  இரண்டு மரங்கள் இருக்கின்றன இரண்டு வெவ்வேறு வகைக் காய்கள்  அதில் ஒரு மரம் காய்ப்பதே அரிது இந்த ஆண்டு அதிலும் சிலகாய்கள் இருப்ப்சதாக மனைவி கூறினார் பார்ப்போம் நமக்கு அதை ருசிக்க வாய்ப்பு இருக்கிறதா  என்று  மரங்களில் காய் பறிக்க யாருடைய உதவியையாவது நாடவேண்டும் மார்ச் 30 ம் தேதி அடித்த பலமான காற்றிலும் மழையிலும்   பல காய்கள் விழுந்து விட்டன விழும் போது காயப்படுகின்றன வெம்பிப் போய் விடுகின்றன 

வீட்டின் முன்  பக்கம் ஒருதென்னைஇருக்கிறது  நன்கு காய்க்கக் கூடியது எங்கள் தேவை என் மக்களின்  தேவை மற்றும் உறவுகள் சிலருக்கும்   கொடுக்கப்படும்  என்ன தொந்தரவு என்றால் மரத்திலிருந்து விழும் மட்டைகள் சாலையில் விழும் யாராவது எடுத்துப்போய் விடுவார்கள்  கவலை எல்லாம்மட்டை யார்தலையிலாவது விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான்  அதைக் காட்டியே வீட்டின்  முன் பக்கம் வண்டிகள்நிற்க  வைக்கப்படுவதைத் தடுக்கிறோம்  இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் முற்றிய காய்களைப் பறிக்க ஆட்கள் கிடைப்பதில்லை ஒரு சிலர் நன்கு குடித்து விட்டு மரம் ஏற வருவார்கள் நாங்கள் அனுமதிப்பதில்லை ஒரு சில மரமேறிகளின்  தொலை பேசி எண்கள் இருக்கிறது ஆனால் அவர்கள்தொலை தூரத்தில் இருந்துவர வேண்டும்   சாலையில் போக்குவரத்து காலையிலேயே களை கட்டி விடும்முன் தினமே அவரைத்தொடர்பு கொண்டு காய்பறிக்க வேண்டும் என்போம்   அவர் அதிகாலயில் தொலை பேசியில் அழைத்துஅவரை எழுப்ப கூறுவார் காய்கள் பறிக்கும் போதும் அவை சாலையில் யார் தலையிலும் விழாமல் இருக்க யாராவதுஒருவர் நின்று பார்க்கவேண்டும்  கீழே இருந்து பார்க்கும் போது நிறைய காய்கள் இருப்பதுபோல் தெரியும்  ஆனால் அவர்பறித்துகீழே போடும்போது ஐம்பதுக்கு கீழே இருக்கும்   இத்தனைக்கும்  மரமேறிக்கு  ரூ  250/ம்  கீழே இருந்து கண்காணிப்பவருக்கு  ரூ 100/ம் கொடுக்க வேண்டும்  கணக்குப்போட்டுப்பார்த்தால்  ஒரு காய்பறிக்க ரூ ஐந்திலிருந்து ஆறுவரை ஆகு ம்  அது தவிர மட்டை உரிக்க காய்க்கு ரூ 2 / கொடுக்க வேண்டும்
உடலில்தெம்பு இருந்தால் சிலபணிகளை நாமே செய்யலாம்  என்று இருக்கும் மார்க்கெட்டில் தேங்காய் விற்கும் விலையில்  எல்லாம் சரியாகி விடும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்வீட்டின் முன் இருக்கும் தென்னை 


  

Thursday, April 5, 2018

உபாதை கடைசி பாகம்


                                      உபாதை கடைசி பாகம்
                                     ------------------------------------

    இந்த உபாதைகள் பற்றிய பதிவுகளின்  கடைசிக்கு வந்து விட்டேன்  என்றே நினைக்கிறேன்  நான்  அனுபவித்த உபாதைகள் பற்றி கூறாவிட்டால் முழுமை பெறாது என்பதால் கட்டக்கடைசியாக இது அதேநேரம்  இனியும் உபாதைகள் இருக்காதா எனத்  தெரியவில்லை  
2017ல் செப்டெம்பர் மாதம்  என்று நினைக்கிறேன்   ராஜ நடை என்றுபெருமைப்பட்டுக் கொண்டிருந்த நான்  என் நடையில் ஒரு தளர்வு ஏற்படுவதை உணர்ந்தேன்  மாதமருந்துகளுக்கு பி எச் இ எல் மருத்துவமனைக்குச் செல்லும் நான் அங்கிருந்த மருத்துவரிடம் இதனைத் தெரிவித்தேன்  அவரும் என்னைஅங்கும் இங்கும் நடக்கச்சொன்னார்  பிறகு  ஒரு நரம்பியல் நிபுணர் பெயரும்  மருத்துவ மனை பெயரும் கூறி அங்கு போய் காண்பிக்கச் சொன்னார்
அந்த நிபுணரும்  என்னைப் பற்றி கேட்டுக் கொண்டார்  பிறகு  என்னை எம் ஆர் ஐ  பிரிவுக்கு அனுப்பினார் தைராய்ட் டெஸ்ட் செய்யச்சொன்னார் 

வாசகர்களில்  யாராவது எம் ஆ ஐ  டெஸ்டுக்கு ஆளாகி இருக்கிறீர்களா எனக்கு இரு முறை எம் ஆர் ஐ  எடுத்திருக்கிறார்கள் ஒரு முறை வீழ்வேன்  என்று நினைத்தாயோ என்னும் பதிவில் கண்டபடி நான்  வீழ்ந்தபோது மறு முறை என் நடை தளர்வதற்கான  காரணம் அறிய.  ஒரு அனுபவம்  . நம்மை ஒரு மெஷினுக்குள் புகுத்துகிறார்கள்  நாம்  அப்போது அசையாமல் இருக்க வேண்டும் என்று கூறு கிறார்கள் ஆனால் பாருங்கள் இந்தவிசித்திர  நிலை. அப்போதுதான்  நமக்கு உடம்பை அசைத்து வேறு நிலைக்கு வர தோன்றும்  இருமல் வரும் தும்மல்வரும் இதை எல்லாம் அடக்குவது அதுவும் கட்டாயமாக அடக்குவது எவ்வளவுசிரமம் என்பது அனுபவிக்கும் போதுதான் புரியும் மீறி அசைத்து விட்டால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து  தொடங்குவார்கள் சுமார் 20 நிமிடங்கள் அசையாமலிருப்பது டார்ச்சர்
  இந்த அவஸ்தைகள்நமக்கு  இரண்டுமுறையும்  எம் ஆர் ஐ ரிசல்டில் ஏதும்  தெரியவில்லை  பிறகு இன்னும் பலடெஸ்டுகள்  எதிலும் பிடி கிடைக்காமல் பெயருக்கு ஏதோ மருந்துகள் கொடுக்கிறார்கள் என்னவோ இஞ்செக்க்ஷன் போடச் சொன்னார்கள்  அது பி 12  என்று தெரிந்தது  இன்னும்  ஏதும்  சரியாக வில்லை  எதையாவது சொல்லி என் மனைவியின்  துன்பத்தை அதிகரிப்பார்கள் என்றே தோன்றுகிறது எதுக்கும்  டெஸ்டுகளெதுவும்  குறிப்பிட்டகுறைகூற வில்லை  மருத்துவரும் அவருக்குத் தோன்றிய மருந்துகளை எடுக்கச்சொல்கிறார்கள் 
      
இன்னும் சகஜமாக நடக்க முடிவதில்லை வாக்கிங் போய் பல நாட்கள் ஆகி விட்டன  இருந்தாலும்  நான் நடக்கப் போவது என்று உறுதியாக இருக்கிறேன்  என்ன வென்றால்  என்  நடையே மாறிவிட்டது கால்களை எடுத்து வைக்ககொஞ்சம் எஃபர்ட் போடவேண்டும்  என் பேரன் சொல்கிறான்  நான் தேய்த்து தேய்த்து நடக்கிறேனாம்  இன்னு ம் சரியான உணர்வு எனக்கு வர வில்லை பயணங்கள் எனக்குப்  பிடிக்கும்  ஆனால் எங்கும் போகப் பிடிக்கவில்லை யாருடைய உதவியும்இல்லாமல் போக விருப்பம்  ஆனால் தடை இருக்கிறது 

எம் ஆர் ஐ மெஷின்  (படம் இணையத்தில் இருந்து )
பல நாட்களுக்குப் பின் அருகில் இருக்கும்  நடை பூங்காவுக்குப் போனேன்   காலையில் நடப்பதுதான் எனக்குப் பிடிக்கும்    
  நான்கு  நாட்களாகத் தொடகிறேன்   நடை பூங்காவில் உடற் பயிற்சி  செய்ய சில  உபகரணங்கள்நிறுவி இருக்கிறார்கள் இது வரை நான் பார்க்காதது  என்ன விஷயம்  என்றால் இந்த இரு  நாட்களிலேயே சில உபகரணங்கள்  பழுதடைந்து விட்டன
நடக்கும் போது எவ்வளவு தூரம்நடந்தேன்  என்பதைகாட்டும்  ஒரு கை பேசி என்னிடம் இருக்கிறதுதினம் சுமார் இரு கி மீ நடப்பதாகக் காட்டுகிறதுஅதைக் கொண்டுஒருபுகைப் படம் எடுத்தேன்  அதுகீழே 


உடற்பயிற்சிக்காக நிறுவிய உபகரணங்கள்
Tuesday, April 3, 2018

சின்ன சின்ன சரம்


                                    சின்ன சின்ன சரம்
                                   -----------------------------

காமராஜர் எப்போதும்  துண்டை தன்  தோளில் ஒரு பக்கத்தில்தான் போடுவாராம்  ஒரு முறை அது மாறி இருக்கவே பத்திரிகை  நிருபர்கள் கேட்டனராம்  அவர் சும்மாத்தான் என்று மழுப்பினாராம்  ஆனால் நிருபர்கள் துருவி துருவி கேட்க அவர் தன் தோள் துண்டை எடுத்துக்காண்பிதாராம் சட்டையிலிருந்தகிழிசலை மறைக்கவே இந்தமாற்றம் என்று புரிந்து கொண்ட நிருபர்கள் வாயடைத்துப் போய் விட்டார்களாம்

என் மகன்  எனக்கு அனுப்பிய செய்தி ஒரு முறை ஒரு தெலுங்கு பிரமுகரும்  ஜேம்ஸ் பாண்டும்   விமானத்தில்  பயணித்தார்கள் தெலுங்கு நண்பர் ஜேம்ஸ் பாண்டிடம்  அவர்  பெயரைக் கேட்டாராம்  அவர் தன் பெயர் பாண்ட் …ஜேம்ஸ்பாண்ட் என்று ஸ்டைலாகக் கூறினாராம்  பிறகு தெலுங்கு நண்பரின் பெயரைக் கேட்டாராம்   அதற்கு அவர்  தன் பெயர் ராவ் என்றாராம் பின்  விளக்கமாக   sivaraao
Sambasiva rao
Vengkata sambasiva rao
yarlagadda vengata sambasivarao
raajaseekara yarlagadda vengata sambasiva rao
sitharaamanjaneyulu rajasekara yarlagadda vengkata sampasivarao
vijayavada sitharamanjaneyulu rajasekara yarlagadda vengkata sambasiva rao
அதற்குபிறகு பாண்டிடம் யாராவது பெயர் கேட்டால் வெறுமே ஜேம்ஸ்  என்று மட்டும் சொல்லி வருகிறாராம்

ஒரு விவாக ரத்து வழக்கில் ஜீவனாம்ச வழக்கில் நீதிபதி நான் இந்த வழக்கை நன்கு விசாரித்து உன் மனவிக்கு  மாதம் ரூ 2,00,000 தர ஜீவனாம்சமாக தர   தீர்ப்பளிக்கிறேன்    என்றாராம் 
கணவன் அதைக் கேட்டு மிக நல்ல தீர்ப்பு யுவர் ஆனர்  நானும்  முடிந்தபோது ஏதாவது ஒருதொகை தர இசைகிறேன் என்றானாம்

நோயாளி-- டாக்டர் என்கண்களில் ஏதோ கோளாறு ஏதோ தூரத்தில் வருவதுபோல் தெரிகிறது ஆனால் கிட்டப் போனால் எதுவுமே இல்லை
டாகடர் அது ஒன்றுமில்லை  annual increment  deficiency  syndrome  என்பதுதான்  அது என்றாராம்
(மாத சம்பளம் வாங்கும் நண்பர்களுக்கு அர்ப்பணம்)
 
மார்ச் 30ம் தேதி நாங்களிருக்கும் இடத்தில் நல்லகாற்றுடன் பெருமழையும் இருந்தது ஆலங்கட்டியுடன் கூடிய மழை  முடிந்தவரை காணொளியில்  சுட்டது


அண்மையில் மருத்துவ மனையிலிருந்தபோது உணர்ந்தது முன்பெல்லாம்  மலையாள செவிலியர்கள் இருந்தனர் இப்போது யாரையும்காணவில்லை கன்னட நர்சுகளும்   வடகிழக்கு பாகத்திய நர்சுகளுமே இருக்கின்றனர் என்ன காரணமோ தெரியவில்லை